பெர்சத்து எம். பி. க்கள் தங்களின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற சபாநாயகருக்கு பதிலளித்துள்ளனர்

பெட்டாலிங் ஜெயா, ஜுன் 30-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் – மிற்கு ஆதரவளித்த பெர்சத்து எம். பி. க்கள் தங்களின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற சபாநாயகருக்கு பதிலளித்துள்ளனர் கட்சியிலிருந்து உறுப்பினர் தகுதியை இழந்துள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் நிலை குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க நாடாளுமன்ற சபாநாயகர் ஜோஹாரி அப்துல் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, அதற்கு அவர்கள் பதிலளித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடம் காலியாக உள்ளதாக எதிர்கட்சியினர் சபாநாயகருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியதை தொடர்ந்து, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வியாழக்கிழமை தாம் உட்பட இதர ஐந்து எம். பி. களும் சபாநாயகர் ஜோஹாரி – யிடம் தங்களின் விளக்கக் கடிதத்தை சமர்பித்திருப்பதாக
புக்கிட் கந்தாங், எம்பி சையது அபு ஹுசின் ஹபீஸ் சையத் அப்துல் பசல் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக,பெர்சத்து கட்சியினர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள், கட்சியின் அரசியலமைப்பு திருத்தங்களின் விளைவுகள் மற்றும் கட்சியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகளில் அந்த ஆறு எம். பி. க்களும் ஈடுபட்டார்களா இல்லையா என்பது அவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று சபாநாயகர் வலியுறுத்தியிருந்தார்.

பிரதமருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாக தஞ்சங் கராங், லாபுவான், புக்கிட் கந்தாங், ஜெலி, குவா முசாங், குவாலா கங்சார் ஆகிய தொகுதிகளின் எம். பி. க்கள் உட்பட சிலாங்கூர், செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினரும் இதில் அடங்குவர்.

WATCH OUR LATEST NEWS