கோலாலம்பூர் ,ஜுன் 30
எஸ்.பி.ம் தேர்வில் 10 A – க்கள் மற்றும் அதற்கு மேலான மதிப்பெண்களை பெறுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் இனம் அல்லது அவர்களின் பின்னணியை ஆராயாமல் அடுத்த ஆண்டு சேர்க்கையிலிருந்து மெட்ரிகுலேஷன் கல்லூரியில் மேற்கல்வியை தொடர்வதற்கு இடம் கிடைக்கப் பெறும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
கல்வி அமைச்சகமும் உயர்கல்வி அமைச்சகமும் இணைந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இது, எஸ்.பி.ம் தேர்வில் சிறந்த தேர்ச்சி நிலையை பெறுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் தங்களின் உயர்கல்வியை தொடங்குவதற்கு கிடைக்க பெற்ற ஓர் அரிய வாய்ப்பாக நம்புவதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
மேலும், இந்த புதிய செயல்முறையினால் மெட்ரிகுலேஷன் – னில் பூமிபுத்ரா மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் எண்ணிக்கையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது என்று பிரதமர் பதிலளித்தார்.