புத்ராஜெயா , ஜூலை 02-
கடந்த சனிக்கிழமை புத்ராஜெயா, கோம்ப்ளக்ஸ் செரி பெர்டானா – வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அலுவலகத்தின் முன் நடைபெற்ற எதிர்ப்பு பேரணி தொடர்பில் போலீசார் இதுவரை 11 தனிநபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்மதி அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
ராக்யாட் லாவன் அன்வர் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் என்று நம்பப்படும் 11 பேர், இன்று பிற்பகல் 2 மணிக்கு புத்ரா ஜெயா போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பட்ருல் ஹிஷாம் என்ற சே’குபார்ட் என்பவர் வரும் புதன்கிழமை விசாரணைக்கு அழைக்கப்படுவர். துன் பைசல் இஸ்மாயில் அஜீஸ் என்பவர் வெகுவிரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று ஏசிபி அஸ்மதி மேலும் கூறினார்.