புத்ராஜெயா, ஜூலை 02-
கெந்திங் ஹைலண்ட்ஸில் வித்துக்குள்ளான சுற்றுலா பேருந்து ஒட்டுநருக்கு லைசென்ஸ் இல்லாதது மட்டுமல்ல, அந்த பேருந்துக்கு செல்லத்தக்க பெர்மிட்டும் இல்லை என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
போர்ட் கிள்ளான், பண்டமாரானை தளமாக கொண்ட சரிகாட் எம். குமார் Trans Tour Sdn. Bhd. என்ற சுற்றுலா பேருந்து நிறுவனத்திற்கு சொந்தமான அந்த சுற்றுலா பேருந்தின் பெர்மிட் கடந்த பிப்ரவரி பிப்ரவரி 16 ஆம் தேதி காலவதியாகியுள்ளது.
அந்த சுற்றுலா பேருந்தின் வயது வரம்பு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் அந்த சுற்றுலா பேருந்து நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அபாட் எனப்படும் ( APAD ) தரைமார்க்க பொது போக்குவரத்து ஏஜென்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அநதோணி லோக் தெரிவித்தார்
கடந்த வாரம் சனிக்கிழமை கெந்திங் ஹைலண்ட்ஸில் சுற்றுலா பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதி தடம்புரண்டதில் இரண்டு சீன நாட்டுப் பிரஜைகள் உயிரிழந்ததுடன், 19 பேர் காயமுற்றனர்.
அந்த பேருந்தை செலுத்திய 32 வயது ஓட்டுநருக்கு லைசென்ஸ் இல்லையென்பது போலீஸ் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.