ஷா ஆலம், ஜுலை 02-
ஸ்.பி.ம். தேர்வில் சிறந்த அடைவு நிலையைக் கொண்ட அனைமெத்து மாணவர்களுக்கும்
மெட்ரிக்குலேஷன் கல்வி வாய்ப்பு வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால், பூமிபுத்ரா மாணவர்களின் கோட்டவில் கை வைக்காமல் இது எவ்வாறு
சாத்தியம் ஆகும் என்று ம.சீ.ச கேள்வி எழுப்பியுள்ளது.
பூமிபுத்ரா மாணவர்களின் கோட்டா பாதிக்கப்படாமல் 10 A க்கு மேல் பெற்ற
அனைத்து இன மாணவர்களுக்கும் மெட்ரிக்குலேஷன் கல்வி வாய்ப்பு வழங்கப்படும்
என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பூமிபுத்ரா மாணவர்களின் கோட்டாவில் கை வைக்காமல் இந்த இட ஒதுக்கீட்டை
மற்ற இனத்து மாணவர்களுக்கு அரசாங்கம் எவ்வாறு வழங்கப்போகிறது என்பது
குறித்து விரிவான விளக்கத்தை உயர் கல்வி வழங்க வேண்டும் என்று ம.சீ.ச தலைவர்
டத்தோ செரி வீ கா சியோங் கேட்டுக்கொண்டுள்ளார்.