கோலாலம்பூர், ஜூலை 02-
கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து சிறார்கள் சம்பந்தப்பட்ட மனநல பிரச்சனை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோ செரி DR . ZULKEFLY அகமது தெரிவத்துள்ளர்.
தேசிய சுகாதார ஆய்வறிக்கையின்படி கடந்த ஆண்டு, 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 10 லட்சம் சிறார்கள் மனநல பிரச்சனை எதிர்நோக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டர்.
5 க்கும் 15க்கும் இடைப்பட்ட வயதுடைய சிறார்களில் மனநலப் பிரச்சனை எதிர்நோக்கி இருப்பவர்களில் கடந்த 2019 , ஆம் ஆண்டு 7.9 விழுக்காடு அல்லது 24 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை , கடந்த ஆண்டு 16.6 விழுக்காடு அல்லது 9 லட்சத்து 22 ஆயிரமாக 318 பேராக உயர்ந்துள்ளாது.
இது இரண்டு மடங்கு அதிகரிப்பாகும் என்று நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தஞ்சோங் கராங் எம்.பி. DR சுல்காபெரி ஹனாபி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் DR DZULKEFLY மேற்கண்டவாறு கூரினார்.