மாணவர்கள் மத்தியில் HIV சோதனை செய்யப்பட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 6-

பல்கலைக்கழங்களில் நுழையவிருக்கும் புதிய மாணவர்களிடம் HIV சோதனை நடத்தப்பட வேண்டும் என்று மலாயாப் பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் இடைக்கால தலைவர் நஜிரா அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

18 க்கும் 25 க்கும் இடைப்பட்ட வயதுடைய இளையோர்கள் மத்தியில் HIV சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உயர்கல்விக்கூட மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சோதனையை அந்தந்த பல்கலைக்கழகங்கள் கட்டாயமாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது HIV சம்பவங்கள் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் பல்கலைக்கழக வளாக அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை. அதேவேளையில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை மீதான கொள்கை வரைவுகளும் போதுமான அளவில் இல்லை.

இந்நிலையில் புதிதாக சேர்க்கப்படும் மாணவர்கள் மத்தியில் HIV சோதனை நடத்தப்படுவது அவசியமாகும் என்று நஜிரா அப்துல்லா விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS