Sungai Bakap இடைத் தேர்தல் வாக்களிப்பு தொடங்கியது

கோலாலம்பூர், ஜூலை 6 –

பினாங்கு, Sungai Bakap சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தல் வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது.

சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படும் Sungai Bakap இடைத் தேர்தலில் காலை 12.00 மணி வரையில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையமான SPR அறிவித்துள்ளது.

39 ஆயிரத்து 151 பதிவுப் பெற்ற வாக்காளர்களை கொண்டுள்ள இத்தொகுதியில் மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 65 வாக்குச்சாவடி வழிதடங்கள் ஏற்படுத்தப்பட்டுட்டுள்ளன.

இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜூஹாரி அரிஃபிக்கும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ஆபிதீன் இஸ்மாயிலுக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் முடிவு இன்றிரவு 9.30 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS