அம்பாங், ஜூலை 8-
சிலாங்கூர், அம்பாங்கிலுள்ள கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதணையில், பாதுக்காக்கப்பட்ட ஆமை இனத்தைச் சார்ந்த 200 ஆமைகளை விற்கவிருந்த கும்பலின் நடவடிக்கை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
இம்மாதம் 2ஆம் தேதி இரவு மணி 7.30 அளவில், பல்வேறு அமலாக்கத் தரப்புகள் ஒருங்கிணைந்து அச்சோதணையை மேற்கொண்டன.
அதில், வெளிநாட்டிலிருந்து பதுக்கி கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த ஆமைகள், 3 பாம்புகள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஒரு பெண் உள்பட மொத்தம் அறுவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.