அம்புலன்ஸ் வண்டி தடம்புரண்டது

தைப்பிங், ஜூலை 09-

நோயாளியை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி ஒன்று சாலையை விட்டு விலகி தடம்புரண்டதில் நால்வர் காயமுற்றனர்

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தைப்பிங், கொம்யூனிட்டிங் அருகில் நிகழ்ந்தது. 68 வயது நோயளியை ஏற்றிக்கொண்டு , இரண்டு மருத்துவ உதவியாளர்களான 41 வயது பெண் மற்றும் 57 வயது ஆண் ஆகியோருடன் 20 வயது ஓட்டுநர், அந்த அம்புலன்ஸ் வண்டியை செலுத்தியதாக கூறப்படுதிறது

குடை சாய்ந்த அம்புலன்ஸ் வண்டியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட நால்வரையும் கொம்யூனிட்டிங் தீயணைப்பு , மீட்புப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS