மராங், ஜூலை 10-
நற்பண்பும் சுய ஒழுக்கம் கொண்டவர்கள் நாட்டில் அதிகரிக்க வேண்டும்-பிரதமர்.
சுய ஒழுக்கம் கொண்டவர்களும் நற்பண்பு நிறைந்தவர்களும் நாட்டில் இன்னும் போதவில்லை என்று மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறி உள்ளார்.
திரங்கானு மாநிலத்தைச் சார்ந்த உள்துறை அமைச்சு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த நல்லெண்ண விருந்து உபசரிப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய பிரதமர், அரசியவாதிகள், அதிகாரிகள் அனைவருக்கும் நற்பண்புகள் ஊட்டும் பயிற்சிகள் தர வேண்டும் என்றார்.
நிறைய அரசியல்வாதிகள் காழ்ப்புணர்ச்சி, ஊழல், களவாடுதல் போன்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்ப்தால், அவர்களுக்கு நற்பண்பு சார்ந்த பயிற்சிகள் கட்டாயம் என வலியுறுத்தியதுடன், நற்பண்புகள் கொண்டவர்களையும் சுயமரியாதையுடன் இயங்குபவர்களை உருவாக்குவதில் நிறையா சிக்கல்கள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.