கோலாலம்பூர், ஜூலை 10-
நாட்டில் சிறந்த போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்துவதால், பொருளாதாரம் உயர நல்ல வாய்ப்புகள் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று நாடாளுமன்றத்தில் தனது கூற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
வளமான பொது போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்துவதில், பண செலவீணங்களை பற்றி விவாதிக்காமல், அது மக்களுக்கு நீண்ட கால உதவியாக இருப்பதுடன், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வழிகளில் தொடர்கள் ஏற்படுத்தும் என்பதால், மக்கள் இலகுவாக குறைந்த கட்டணத்தில் தங்களின் பணி இடங்களுக்குச் செல்ல வாய்ப்பாக அமையும்.
பொது போகுவரத்து வசதிகள் மேம்படுத்துவதால் நாட்டில் உள்ள சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதுடன், புதிய சிறிய பட்டணங்களும் வியாபார பெருக்கமும் ஏற்படும் என அமைச்சர் விளக்கினார்.