கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயல்

கிளிநொச்சி, ஜூலை 11-

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மாணவர்களின் பாடசாலைக் கல்வி பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாடசாலை நேரங்களில் தனியார் கல்வி நிலையங்கள் பாடசாலை மாணவர்களுக்கான வகுப்புக்களை நடாத்தி வருகின்றனர். இதனால் பாடசாலைக்கு வராது தனியார் வகுப்புக்களுக்கு மாணவர்கள் செல்கின்றனர்.

இது மாணவர்களுக்கான பாடசாலைக் கல்வியினை பாரியளவில் பாதிப்படையச் செய்து விடும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தனியார் கல்வி நிலையத்திற்கு பணம் செலுத்தி செல்லும் மாணவர்களின் இயல்பு பாடசாலைக் கல்வியை மட்டும் நம்பி தங்கள் கல்வியைத் தொடரும் வறிய மாணவர்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதித்து விடும் என இது தொடர்பில் சமூகவிடய ஆய்வாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

தனியார் கல்வி நிலையங்கள் பாடசாலை நேரங்களில் பாடசாலை மாணவர்களுக்கு வகுப்புக்களை முன்னெடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும்.பாடசாலைக் கல்வியோடு பாடசாலையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும்படி தனியார் கல்வி நிலையங்கள் இயங்க வகை செய்ய வேண்டும்.

இது தொடர்பில் மாவட்ட மட்டத்திலான பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகளை விரைவாக உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS