கோலாலம்பூர், ஜூலை 02-
டிக் டோக் பிரபலமான ஈஷா என அறியப்படும் 29 வயது A. ராஜேஸ்வரி எனும் பெண், இணையப் பகடிவதை காரணமாக தற்கொலை செய்துக் கொண்டது தொடர்பான விசாரணையில், இரண்டாவது நபராக ஓர் ஆடவரை போலீஸ் கைது செய்துள்ளது.
டிக் டோக்-க்கிலுள்ள DULAL BROTHERS என்ற கணக்கின் உரிமையாளர் என சந்தேகிக்கப்படும் உள்நாட்டு ஆடவரான அவர், நேற்று மாலை மணி 6.30 அளவில், கோலாலம்பூர் ஸ்டபாக் -க்கில் கைது செய்யப்பட்டதாக,செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கமிசியோனிற் அஹ்மத் சுகர்னோ மோஹட் சஹாரி தெரிவித்தார்.
லோரி ஓட்டுநராக வேலை செய்துவரும் அவ்வாடவர் மீது, குற்றவியல் சார்ந்த மருட்டல் விடுத்ததற்காக குற்றவியல் சட்டத்தின் SEKSYEN 506, அறுவருக்கத்தக்க பதிவுகளை இட்டதற்காக 1998ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக சட்டத்தின் SEKSYEN 233, 1995ஆம் ஆண்டு சிறு குற்றச் சட்டத்தின் SEKSYEN 14 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அஹ்மத் சுகர்னோ கூறினார்.
ஈஷா-வின் தற்கொலை தொடர்பில், போலீஸ் இதற்கு முன்பு, 35 வயது மாது ஒருவரை விசாரணைக்காக தடுத்துவைத்திருந்தது.
ஈஷா-வுக்கு, சம்பந்தப்பட்ட சந்தேகப்பேர்வழி, இரு டிக் டோக் கணக்குகளின் வாயிலாக மிரட்டல் விடுத்தாக கூறப்படுகின்றது.