ஈப்போ, ஜாலான் பெர்பாடுவானில் இரு மோட்டார் சைக்கிள் மோதியதில் பி-ஹெய்லிங் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

ஈப்போ , ஜூலை 11-

26 வயதான அந்த நபர் நேற்று மாலை 6.30 மணியளவில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக ஈப்போ மாவட்ட காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் அபாங் சைனால் ஆபிதீன் அபாங் அஹ்மத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பி-ஹெய்லிங் ரைடர் ஒரு சந்திப்பில் இருந்து வெளியேறி வலதுபுறம் திரும்பியபோது, மற்றொரு மோட்டார் சைக்கிள் வாகனத்தின் பக்கவாட்டில் மோதியதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

இதனை அடுத்து, பொதுமக்கள் கவனத்துடன் இருக்கவும், போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்கவும், தங்களையும் மற்ற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்!

WATCH OUR LATEST NEWS