சமூக ஊடகங்களில் போலி கணக்ககுகளை தடுப்பதற்கு அடையாள அட்டையை பதிவுபடவேண்டும்

கோலாலம்பூர், ஜூலை 11-

டிக்ட்டோக் சமூக ஊடகத்தில் தொடர் பகடிவதையினால் தன் உயிரை மாய்துகொண்ட ராஜேஸ்வரி என்ற ஈஷாவின் மரணம் தனிமனித பிரச்சனை அல்ல என்று Kebajikan Dinamik Sinar Kasih Malaysia (DSK) இன் தலைவரான Datuk N சிவக்குமார் கூறினார்.

இது போன்ற சம்பவங்களை தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று Datuk Nசிவகுமார் கூறினார் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி ஒருவரை பகிடிவதை செய்யும் இது போன்ற செயல்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்
சமூக ஊடகங்களில் போலி கணக்ககுகளை தடுப்பதற்கு அடையாள அட்டையை குறிப்பிட்ட செயலியில் இணைக்கும் முறை அமல்படுத்தினால் மட்டுமே சைபர் குற்றவாளிகளை பிடிப்பதும், போலி கணக்குகளின் எண்ணிக்கையை களைய முடியும் என்று Datuk N சிவகுமார் வலியுறுத்தினார்.

நாளை வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமாக சமூக ஊடக பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தகவல் தொடர்பு அமைச்சர் பாமி பட்சில் கூறியதை சிவகுமார் வரவேற்றார்

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அரசாங்கம் விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்று Datuk N சிவகுமார் கூறினார்.

WATCH OUR LATEST NEWS