இந்த அதிசயத்த பாருங்களேன்… காற்றைக் கடைந்து வெண்ணெய் எடுத்த ஸ்டார்ட்அப் நிறுவனம்! பில் கேட்ஸ் செய்த மேஜிக்!

இந்த செயல்முறையில் விலங்கு அல்லது காய்கறி கொழுப்பு எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் தயாரிக்கப்பட்ட வெண்ணெய் இயற்கையான வெண்ணெய் போலவே சுவை இருப்பதாகவும் சேவர் நிறுவனம் கூறுகிறது.

மைக்ரோசாஃப்ட் தொழிலதிபர் பில் கேட்ஸ் ஆதரவு பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று தெர்மோகெமிக்கல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காற்றில் இருந்து வெண்ணெய் தயாரித்து அதிசய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆதரவு பெற்ற சேவர் (Savor) என்ற அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்த சாதனையைச் செய்துள்ளது. காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு (CO2) வாயுவின் கார்பன் அணுக்களையும் நீராவியில் இருந்து ஹைட்ரஜன் அணுக்களையும் சேர்த்து ஆக்ஸிஜனேற்றம் செய்து வெண்ணையை தயாரித்துள்ளனர்.

இந்த செயல்முறையில் விலங்கு அல்லது காய்கறி கொழுப்பு எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் தயாரிக்கப்பட்ட வெண்ணெய் இயற்கையான வெண்ணெய் போலவே சுவை இருப்பதாகவும் சேவர் நிறுவனம் கூறுகிறது.

WATCH OUR LATEST NEWS