கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தமிழக கட்சியொன்று விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை,ஜூலை 12

இலங்கையின் நெடுந்தீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி தமிழக கடற்றொழிலாளர்கள் 13 பேரை  இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி, இரண்டு நாட்டு கடற்றொழிளாளர்களும், குறித்த கடற் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி நேற்று (11) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள்ளார்.

அந்த அறிக்கையில், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டு அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக. ஜூலை 1ம் திகதியும் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

WATCH OUR LATEST NEWS