பெட்டாலிங் ஜெயா, ஜூலை 12-
பெர்சாத்து கட்சியிலிருந்து உறுப்பினர் தகுதியை இழந்துள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை நிலைநிறுத்தும் முடிவை சுதந்திரமாக எடுக்கும் அதிகாரம் மக்களவை தலைவர் தன் ஸ்ரீ ஜோஹ்ரி அப்துல்-லுக்கு உள்ளது.
நீங்கிரி சட்டமன்றத்தை காலியானதாக அறிவித்திருந்த கிளந்தான் சட்டமன்ற தலைவர் மோஹட் அமர் அப்துல்லாஹ் -வின் முடிவை, பின்பற்ற வேண்டிய அவசியம், ஜோஹ்ரி-க்கு துளியும் இல்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர் பைரோஸ் ஹுசைன் அஹ்மத் ஜமாலுட்டின் கூறுகையில், நாடாளுமன்றம் சுதந்திரமாக செயல்படுகின்ற ஓர் இடம் என்றும், மாநில சட்டமன்றங்கள் எடுக்கின்ற முடிவுகளுக்கு, மக்களவைத் தலைவர் கட்டுப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார்.
அரசியலைமைப்புதொடர்பானவழக்கறிஞர்பாஸ்டியன் பியூஸ் வேண்டர்கோன் கூறுகையில்,ஜோஹ்ரி-யின் முடிவு குறித்து நீதிமன்றத்தில் முறையிட முடியாது எனவும் அவ்விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
பெர்சாத்து கட்சியின் 6 முன்னாள் உறுப்பினர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நிலைநிறுத்தியுள்ள ஜோஹ்ரி-யின் முடிவு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என அதன் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் கூறியிருந்தது தொடர்பில், அவ்விரு வழக்கறிஞர்களும் அவ்வாறு கருத்துரைத்தனர்.