கோல திரங்கானு பத்து ராகிட், கோலா நெருஸில் நேற்று இரண்டு கார்கள் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.

கோல திரங்கானு,ஜூலை 12-

இச்சம்பவத்தில் 23 வயது முஹம்மது இக்வான் அகமது இஸேஹாம் , அவரது மனைவி 18 வயது நூர் மிமி அலியா முகமது ஷுக்ரி மற்றும் 46 வயது ஜைனி அம்பாக் ஆகியோர் மாண்டதாக கோல திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.

நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில், செத்தியூவிலிருந்து கோலா திரெங்கானுவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது.

ஜைனியின் கணவரான 58 வயது ரஸ்தி யாகோப் காயம் காரணமாக சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நூர் மிமி அலியா மற்றும் ஜைனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், முஹம்மது இக்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் அஸ்லி கூறினார்!

WATCH OUR LATEST NEWS