
கோலாலம்பூர், ஜூலை 12-
நாட்டில் வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள், உணவகங்கள், கார் பட்டறைகள் மற்றும் சந்தைக் கடைகள் ஆகியவற்றுக்கான உரிமங்களுக்கு விண்ணப்பிக்கவோ அல்லது வைத்திருக்கவோ வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்று பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
உள்ளூர் விதிமுறைகளை மீறி, வெளிநாட்டினருக்கு அத்தகைய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர்களின் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படும் என அதன் அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்
மேலும் இத்தகையவர்களுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்த அரசு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!