காசுக்காக என் பொண்ணு கல்யாணம் பண்ணாலா?.. தைரியம் இருந்தா நேர்ல வா.. கோபத்தில் வரலட்சுமி தந்தை..

இந்தியா, ஜூலை 12-

முன்னணி நடிகராக 90ஸ் காலக்கட்டத்தில் திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் நடிகர் சரத்குமார், தன் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமணத்தை தாய்லாந்தில் நடத்தி முடித்துள்ளார். வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ்-ஐ காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் தொடர்பாக பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.

காசுக்காக என் பொண்ணு கல்யாணம் பண்ணாலா?.. தைரியம் இருந்தா நேர்ல வா.. கோபத்தில் வரலட்சுமி தந்தை... | Arathkumar Has Respond To Making Negative Comments

சமீபத்தில் சரத்குமார் அளித்த பேட்டியொன்றில், வரலட்சுமி நிக்கோலாய்-ஐ திருமணம் செய்ய காரணம் 800 கோடி சொத்து தான் என்று சில வதந்திகள் பரவிய வருவது குறித்து பேசியிருக்கிறார். நானும் சமுகவலைத்தளங்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். சிலர் அவர்களுக்கு நேரம் போகவேண்டும் என்று அடுத்தவர்களுடைய வாழ்க்கையை விமர்சிக்கிறார்கள்.

இப்படி மறைந்து இருந்து பேசுபவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது? உங்களுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து பேச வேண்டும், அதைவிட்டுவிட்டு தன்னிடம் இணைய வசதி இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் கமெண்ட் போடலாமா? என் மகளுக்கு மட்டுமில்லை, நான் எல்லா பெண்களுக்காகவும் தான் பேசுகிறேன்.

யாரையாவது ஒருவரை நீங்கள் நெரில் பார்க்காமல் அல்லது கூடவே இருந்து இருந்து அவர்களை பற்றி தெரியாமல் தெரிந்தது போல் உங்கள் கற்பனையை வளர்த்து மற்றவர்களை கன்னாபின்னான்னு பேசும் உரிமையை யார் கொடுத்தது.

காசுக்காக என் பொண்ணு கல்யாணம் பண்ணாலா?.. தைரியம் இருந்தா நேர்ல வா.. கோபத்தில் வரலட்சுமி தந்தை... | Arathkumar Has Respond To Making Negative Comments

இதுமாதிரியா நெகட்டிவ் கமெண்ட்களை நான் கண்டு கொள்வதில்லை. சிலர் மண்டையில் அதை ஏற்றிக்கொண்டு மனதளவில் கஷ்டப்படுவார்கள். எதற்கு இப்படி கஷப்படுத்த வேண்டும்? உங்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது பிரச்சனை இருக்கா? அப்படி எதுவும் கிடையாது. ஆனால் எதற்கு தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களை காயபடுத்த வேண்டும்.

என் பொண்ணு வரலட்சுமி கல்யாணத்தில் கூட சிலர், அவர் பணத்திற்காக கல்யாணம் செய்கிறார் என்று சொல்கிறார்கள். அதற்கு நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில் எதற்கு வரலட்சுமி திருமணம் செய்துகொண்டார் என்று அவருடைய முடிவு. நிக்கோலாயை மனதார பிடித்து திருமணம் செய்துள்ளார்.

அவர்கள் காதல் எனக்கு தெரியவந்த போது நான் யோசித்தது மனைவியை ஒரு கணவரால் காப்பாற்ற முடியுமா? மனதளவிலும் பணத்தாலும் உடலளவிலும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று தான் நினைத்தேன் என்று சரத்குமார் கூறியிருக்கிறார்.

WATCH OUR LATEST NEWS