தாத்தா வராரு!! இந்தியன் 2 படத்தை பார்க்க குதிரையில் வந்து அலப்பறை செய்த கூல் சுரேஷ்..

இந்தியா, ஜூலை 12-

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி இன்று ஜூலை 12 ஆம் தேதி வெளியாகியுள்ள படம் இந்தியன் 2. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேல் படம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது தான் உலகளவில் ரீலிஸ் ஆகியுள்ளது இந்தியன் 2 படம். பல எதிர்ப்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் படத்தின் பிரமோஷன்கள் நடந்து வந்தது.

தாத்தா வராரு!! இந்தியன் 2 படத்தை பார்க்க குதிரையில் வந்து அலப்பறை செய்த கூல் சுரேஷ்.. | Indian 2 Release Cool Suresh Promote Funny Look

இந்நிலையில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை வித்தியாசமான முறையில் பிரமோட் செய்து வரும் கூல் சுரேஷ் இந்தியன் 2 படத்தினையும் பிரமோட் செய்திருக்கிறார்.

சென்னை ரோஹினி தியேட்டருக்கு முதல் காட்சி பார்க்க குதிரை ஓட்டிக்கொண்டு, இந்தியன் கெட்டப்பில் கையில் கத்தியுடன் கூல் சுரேஷ் வந்துள்ளார்.

தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ், தாத்தா வர்றாரு செதறவிடப்போறாரு, ஓடவும்முடியாது ஒளியவும் முடியாது என்று கூறி அலைப்பறை செய்திருக்கிறார். அவரை பார்த்து பலர் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

WATCH OUR LATEST NEWS