கோத்தா கினபாலு, ஜூலை12-
மலேசிய கடப்பிதழ் காலாவாதியின் கால அளவு 10 ஆண்டுகளுக்கு உயர்த்தப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபியூட்டின் நசுட்டின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஆய்வுகள் மற்றும் கருத்து கணிப்புகள் எடுக்கப்பட்டு விட்டதாக கூறிய அமைச்சர் இன்னும் குறுகிய காலத்தில் இந்த 10 ஆண்டுகள் காலாவதி நிபந்தனை அமலுக்குக் கொண்டு வரப் படும் என கூறினார்.
அதுவரை கடப்பிதழ்களுக்கான 5 ஆண்டுகள் காலாவதி கால அளவு நிபந்தனை நடமுரையில் செயல்படுத்தபட்டு வரும் என அவர் தெளிவுப்படுத்தினார்.