நாட்டில் டெங்கி காய்ச்சல்களுக்கு ஆளான நோயாளிகளின் எண்ணிக்கைஅதிகரித்தது

கோலாலம்பூர், ஜூலை 12

நாட்டில் டெங்கி காய்ச்சல்களுக்கு ஆளான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் ரடசி அபு ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் நாள் தொடங்கி ஜூலை மாதம் 6 ஆம் நாள் வரை 15 சம்பவங்கள் உயர்ந்து நிற்பதாக அவர் கூறினர். இந்த ஆண்டு மட்டும் டெங்கி காய்ச்சலினால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 65 என கூறிய ரட்ஷி, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் , கெடா, பேராக், பினாங்கு, கோலாலாம்பூர் மற்றும் புத்ரா ஜெயா மாநிலங்களில் டெங்கி அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
பொதுமக்கள் தங்களின் சுற்று வட்டார தூய்மையைப் பேணுவதுடன் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனே அகற்றி விடுமாறு பொதுமக்களை டாக்டர் ரடசி அபு ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS