செப்பாங்,ஜூலை 14-
செப்பாங் அருகேயுள்ள பகான் லாலாங் கடற்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் கால் நழுவிக் கடலில் விழுந்து மூழ்கிய நபரின் சடலம் மீட்கப்பட்டது.
நேற்று மாலை மணி ஐந்து வாக்கில் தனது உறவினர் பிள்ளையுடன் கடற்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது 27 வயதான அந்த நபர் கால் இடறி கடலில் விழுந்தார்.
மாலை 5:16 மணிக்கு அது குறித்த அவசர அழைப்பை பெற்றதும் பொது தற்காப்புத் துறையினரும், தீயணைப்பு மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் ஆறு மணியளவில் பகான் லாலாங் முகத்துவாரம் அருகே மிதந்த நிலையில் இருந்த நபரின் உடலை, அப்பகுதி வழியாக சென்ற மீனவர்கள் பார்த்துள்ளனர்.
அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், மாலை மணி 6:20-க்கு அவர் உயிரிழந்ததை மருத்துவ தரப்பு உறுதிப்படுத்தியது.