புத்ரஜெயா,ஜூலை 14-
கடந்த புதன்கிழமை பொது நன்கொடை நிதியை மோசடி செய்தது தொடர்பில் தடுத்து வைக்கப்பட்ட ஐவரின் தடுப்புக்காவலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நீட்டித்துள்ளது.
அவர்களில் இருவர் சமூக ஊடக ஆளுமை தம்பதி.
ஏனைய இருவர் நன்கொடையை திரட்டும் வலைத்தள நடத்துனர்கள் ஆவர்.
கடந்த வாரம் விசாரணைக்காக SPRM-க்கு விளக்கமளிக்க வந்தபோது அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து விசாரணயை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை நீட்டிக்கக் கோரி, புத்ரஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் SPRM மனுவை சமர்ப்பித்தது.
மனுவை ஏற்று மாஜிஸ்திரேட் Siti Zahirah Zaidon விசாரணையை தொடர அனுமதி அளித்தார்.