அமெரிக்கா, ஜூலை 15-
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கோபா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பாதியிலேயே வெளியேறிய லியோனல் மெஸ்ஸி 45ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

கோபா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரானது அமெரிக்காவின் மியாமியில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரானது இன்று வரை நடைபெற்றது. இதில், இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும், கொலம்பியா அணியும் மோதின. இன்று காலை 5.30 மணிக்கு தொடங்க இருந்த போட்டியானது மைதானத்திற்கு தாமதமாக வந்த ரசிகர்களால் தாமதமாக தொடங்கப்பட்டது.