பாகிஸ்தான்,ஜூலை 15-
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி சாதனை படைத்த பில்லி இபதுல்லா காலமானார்.
கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் பில்லி இபதுல்லா. பாகிஸ்தான் அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 253 ரன்கள் எடுத்தார். மேலும், ஒரு விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார். தனது அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி சாதனை படைத்தார். முதல் முதலாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இந்தப் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட வீரர்களில் இவரும் ஒருவர். அப்போது பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த ஹனீஃப் முகமதுவின் வற்புறுத்தலின் பேரில் இபதுல்லா அணியில் சேர்க்கப்பட்டார்.