US Election | டொனால்ட் டிரம்ப்பின் துணை அதிபர் தேர்வு ஒரு இந்திய வம்சாவளியின் கணவர்! யார் இந்த உஷா சிலிகுரி!

உஷா சிலிகுரி வான்ஸ், யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் பட்டமும் பெற்றுள்ளார். இவரது கணவர் ஜேடி வான்ஸ்-ஐ அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்
 

அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் சூடிபிடித்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் (JD Vance) ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி குறித்த பின்னணி கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக உஷா சிலிகுரி வான்ஸ் இந்திய வம்சாவளி நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

துணை அதிபர் வேட்பாளர் யார்?

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. மேலும் துணை அதிபராக (JD Vance) ஜே.டி.வான்ஸ்-ஐ டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்

WATCH OUR LATEST NEWS