பினாங்கு ஜார்ஜ் டவுன் பெயர், Tanjung Penaga- வாக மாற்றப்பட வேண்டும் / பாஸ் கட்சி பரிந்துரை

பினாங்கு, ஜூலை 16-

பினாங்கு மாநில நில அடையாளத்தை தாங்கிய வரலாற்று சிறப்புமிக்க ஜார்ஜ் டவுன் பெயர், Tanjung Penaga- வாக பெயர் மாற்றப்பட வேண்டும் என்று பாஸ் கட்சி இன்று பரிந்துரை செய்துள்ளது.

உலக பாரம்பரிய நகரங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஜார்ஜ் டவுன், அதன் பூர்வீக பெயரான Tanjung Penaga என்று விளங்கிட வேண்டும் என்று பாஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பினாங்கு மாநில அரசின் துணை நிறுவனமான ஜார்ஜ் டவுன் Hertage Incorporated ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டுக்கான George Town விழா கொண்டாட்டத்திற்கான விளம்பர காணொளி ஒன்று சர்ச்சையானதைத் தொடர்ந்த பாஸ் கட்சி இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.

சீனர்கள் மற்றும் இந்தியர்களின் பாரம்பரிய கலாச்சாரங்களை பிரதிபலித்து, அவர்களுக்கே உரிய நகரைப் போன்று ஜார்ஜ் டவுன்,சித்தரிக்கப்பட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அந்த மதவாத கட்சி, Tanjung Penaga என்ற பெயருக்கு ஜார்ஜ் டவுன் பெயர் மாற்றம் காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதனிடைய அந்த விளம்பர காணொளியில் மலாக்காரர்களின் கலாச்சார தன்மை ஒதுக்கப்பட்டுள்ளதாக சில தரப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து அதன் ஏற்பாட்டாளர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

WATCH OUR LATEST NEWS