Gossip: 68 வயது தயாரிப்பாளரை பணத்துக்காக வளைத்து போட்ட.. 25 வயது இளம் நாயகி! கோலிவுட் ஹாட் டாப்பிக் இதாங்க!

இந்தியா, ஜூலை 16-

அந்த வசதி படைத்த, 68 வயது தயாரிப்பாளரின் பண வலையில் சிக்கிய 25 வயது நடிகை பற்றி தான் இப்போது கோடம்பாக்கம் முணுமுணுத்துக்கொண்டிருக்கிறது.

வாய்ப்பு தேடி அக்கட தேசத்தில் இருந்து, தமிழுக்கு வந்தவர் தான் இந்த அழகு நடிகை. தன்னுடைய சிரிப்பால் பல தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு, சமீப காலமாக இவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கைகொடுக்கும் என நம்பிய பிக்பட்ஜெட் படங்களில் சில நிமிடம் மட்டுமே வந்து செல்லும் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படமும் காலை வாரியத்தால் அம்மணி லிஸ்டில் படமே இல்லாமல் வாஷ் அவுட் ஆகிவிட்டார்.

அவ்வப்போது வாய்ப்புக்காக, தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடும் இந்த நாயகி சின்னத்திரை வரை இறங்கியும் பலனில்லாமல் போனது.

திரையுலகை விட்டே மூட்டை கட்டி விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அந்த நடிகையின் காட்டில் இப்போது பண மழை பொழுது வருகிறதாம். கையில் படங்களே இல்லை என்றாலும், சொகுசு கார், சென்னையில் சொந்த வீடு என செட்டில் ஆகி விட்டாராம். இவரின் இந்த திடீர் வளர்ச்சிக்கு காரணம் அந்த 68 வயது தயாரிப்பாளருடன் ஏற்பட்ட நெருக்கம் தானாம்

அவர் ஆசையை வெளிப்படுத்தியபோது தயங்கிய நடிகை, பணத்துக்காக அவரின் வலையில் விழுந்து அவரின் ஆசை நாயகியாகவே மாறிவிட்டாராம். எனினும் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருவருமே சைலண்டாக தங்களின் அந்தரங்க உறவை மெயின்டைன் செய்து வருகிறார்கள் என, கோடம்பாக்கத்தில் இந்த கிசுகிசு கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.

WATCH OUR LATEST NEWS