பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை பிரதமர் சந்திக்கிறார்

கோலாலம்பூர், ஜூலை 17-

கடந்த 2009-ஆம் ஆண்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM காவலில் இருந்தபோது, இறந்துபோன அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பில் அவரின் குடும்ப உறுப்பினர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திக்கவிருக்கிறார்.

இந்த சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். மான்னரின் அரியணை விழாவிற்கு பிறகு தியோ பெங் ஹாக் குடும்பத்தினரை சந்திக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தியோ பெங் ஹாக் மரணத்திற்கு நீதிக்கேட்டு கடந்த திங்கட்கிழமை காலையில் மனித உரிமைப் போராட்டவாதிகள் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர்..

15 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்த தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பில் நீதிக் கேட்டு, அவர்கள் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க முற்பட்டனர்.

WATCH OUR LATEST NEWS