கோலாலம்பூர், ஜூலை 17-
சமூக வலைத்தளத்தில் பிரபலமாக விளங்கிய ஏ.ராஜேஸ்வரி என்ற ஈஷா தற்கொலை தொடர்பில் அவரின் தாயார் புஸ்பா செய்து கொண்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் சுகர்ணோ ஜஹாரி தெரிவித்தார்.
39 வயதுடைய அந்த வர்த்தர், இன்று செந்தூல் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் மேலும் ஒரு நபர் மற்றும் போலீஸ் துறையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி ஆகியோரிடமும் தாங்கள் விசாரணை நடத்தவிருப்பதாக சுகர்ணோ ஜஹாரி தெரிவித்துள்ளார்.