16 கத்திக்குத்துக்கு இலக்கான ஆடவர்

கோலாலம்பூர், ஜூலை 18-

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா,தேச மெண்டரி அடுக்ககத்தில், ஐந்தாவது மாடியிலுள்ள வீடொன்றில், உடன் தங்கியிருந்த நபரால், 11 முறை கத்திக்குத்துக்கு இலக்கான ஆடவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

நேற்று அதிகாலை மணி 5.45 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அவரைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர், வீட்டின் சமையலறையிலுள்ள ஜன்னல் வழி, தப்பித்தோட முயற்சித்த போது, கீழே தவறி விழுந்தார்.

அதில், அவருக்கு முதுகெலும்பும் விலா எலும்பும் முறிந்தது.

பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்று, சம்பவம் இடத்திற்கு வந்திருந்த போலீஸ், காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததோடு, கத்தி ஒன்றையும் கைப்பற்றியது.

WATCH OUR LATEST NEWS