47 வெளிநாட்டு தொழிலாளர்கள் தடுத்துவைக்கப்பட்டனர்

பேராக், ஜூலை 18-

பேராக், சிம்பாங் லீமா, சுங்கை ரவா-வில் நேற்று மாலை மணி 3.15 அளவில், பொருள்களை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலை ஒன்றில், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை சோதணையை மேற்கொண்டது.

அதில், கட்டாய தொழிலாளராக்கப்பட்ட 16 வயது பையன் காப்பாற்றப்பட்ட வேளை, நாட்டில் சட்டவிரோதமாக தங்கிவந்த மியன்மார் மற்றும் சீனாவைச் சேர்ந்த 47 வெளிநாட்டு தொழிலாளர்கள் தடுத்துவைக்கப்பட்டனர்.

அதே சோதணையில், சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை தங்கவைப்பதில், அத்தொழிற்சாலையின் முதலாளி ஆட்பலத்துறையின் விதிமுறைகளை மீறியுள்ளதும் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தை தாண்டி, அவர்களை வேலை செய்ய வைத்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS