ரோன் 95 வகை பெட்ரோலுக்கான உதவித்தொகை PADU தரவின் வழி மேற்கொள்ளப்படும்!

கோலாலம்பூர், ஜூலை 18-

நாட்டின் முதன்மைத் தரவு தளம் – PADU-வை முழுமையாக கொண்டு, RON 95 வகை பெட்ரோலுக்கான உதவித்தொகை மறுசீரமைப்பு நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும்.

குறிப்பாக, குடும்பங்களின் நிகர செலவழிப்பு வருமானத்தின் அடிப்படையில், இலக்கிடப்பட்ட தரப்பினர் உறுதிசெய்யப்படுவார்கள் என பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

PADU தளத்தில், தனிநபர்கள், மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்கள், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் முதலானோரின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையில், சுமார் 10.55 மில்லியன் பேர், அதில், தங்களது தகவல்களை நிகழ்நிலைப்படுத்தியுள்ளதாக, நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் பொருளாதா அமைச்சு கூறியுள்ளது

WATCH OUR LATEST NEWS