பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18-
வருகின்ற அக்டோபரில் நடைபெறவிருக்கும் கட்சி தேர்தலில் முதன்மை பதவிகளுக்கு போட்டியில்லை என பெர்சத்து கட்சியின் தலைமைத்துவம் எடுத்துள்ள முடிவால், சில உச்சமன்ற உறுப்பினர்களும் தொகுதி தலைவர்களும் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.
அந்நிலைப்பாடு, நடப்பு துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ அகமது பைசல் அசுமு, உதவித் தலைவர் ராட்ஸி ஜிடின் ஆகியோரை பதவியில் நிலைநிறுத்திக்கொள்ளவே வழிவகுக்கும் என பெயர் குறிப்பிட விரும்பாத உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து-வின் கடைநிலை உறுப்பினர்களுக்காக ஏதும் செய்திடாத ராட்ஸி ஜிடின், கடந்த பொதுத்தேர்தலில் தம்புன் நாடாளுமன்றத்தில் தோல்வி கண்டதோடு, நெகிரி செம்பிலானை கைப்பற்ற தவறிய பைசல் அசுமு ஆகியோரை, பதவியில் நிலைநிறுத்த வேண்டிய அவசியம் என்ன? எனவும் அவர் வினவினார்.