பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18-
நாட்டில் இளையோர் மத்தியில், ஊழலைத் துடைத்தொழிக்க, குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் சிறைக்காலத்தை நீட்டிக்கும் வகையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்தி ஊழல் புரியும் குற்றவாளிக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான சிறைதண்டனை விதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி, TRANSPARENCY INTERNATIONAL MALAYSIA அமைப்பின் தலைவர் டாக்டர்.முகம்மது மோகன் அந்த கோரிக்கையை விடுத்தார்.
நடப்பில், குறைந்தபட்ச சிறைகாலம் நிர்ணயிக்கப்படாததால், ஊழல் புரிந்த குற்றவாளிகள், ஓரிரு நாள்கள் மட்டுமே சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியேறுவதாக .முகம்மது மோகன் கூறினார்.