கோலாலம்பூர், ஜூலை 18-
பொய்யான அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி, மற்றவருக்கு சொந்தமான ஜெர்மனி கடப்பிதழ் மூலம் மலேசியாவிற்குள் நுழைவதற்கு முயற்சி செய்த வியட்நாம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய அந்த வியட்நாம் பெண், கடந்த திங்கட்கிழமை, காலை 10.30 மணியளவில் பினாங்கு, பயான் லேபாஸ் அனைத்துலக விமான நிலையத்தில் தடுக்கப்பட்டார்.
அமெரிக்காவிற்கு செல்வதற்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக ஆவணங்கள் சோதனைக்கு உட்பட்ட போது அந்த வியட்நாம் பிரஜை சிக்கியதாக பராத் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் மேற்பார்வையாளர் கமருல் ரிசல் ஜெனல் தெவித்தார்.
பினாங்கை சுற்றிப் பார்க்க வந்த அந்த வியட்நாம் பெண், பின்னர் பினாங்கிலிருந்து அமெரிக்காவிற்கு செல்வதற்கு மற்றவருக்கு சொந்தமான ஜெர்மனி கடப்பிதழை பயன்படுத்திய போது அவர் பிடிபட்டதாக கமருல் ரிஷால் குறிப்பிட்டார்.