ஜோகூர்வ் ஜூலை 18-
ஜோகூர், கோத்தா திங்கியில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் காருக்கு அடியில் சிக்கி மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று பின்னிரவு 12.15 மணியளவில் Tebrau எண்ணெய் நிலையத்திற்கு முன்புறம் நிகழ்ந்தது. பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர்.
Toyora Vios ரகத்தைச் சேர்ந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் இதில் சம்பந்தப்பட்டு இருந்தன. இதில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் Toyota Vios காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
காரில் பயணம் செய்த மூன்று நண்பர்கள் கடும் காயங்ளுக்கு ஆளாகினர்.