புத்ராஜெயா, ஜூலை 18-
2.264 எடை கொண்ட போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு இந்திய நபர்கள் இன்று மரணத் தண்டனையிலிருந்து தப்பினர்.
அந்த நால்வருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை ரத்து செய்த புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம், அவர்களுக்கு தலா 20 ஆண்டு சிறையும், 10 பிரம்படித் தண்டனையும் விதித்தது.
39 வயது P. சண்முகசுந்தரம், 41 வயது S. விக்கினேஸ்வரன், 35 வயது K. விக்னேஸ்வரன் மற்றும் 40 வயது S. சதன் ஆகியோரே மரணத் தண்டனையிலிருந்து தப்பிய நான்கு நபர்கள் ஆவர்.
அந்த நால்வருக்கு எதிரான போதைப்பொருள் குற்றத்தீர்ப்பை நிலைநிறுத்திய கூட்டரசு நீதிமன்றம், மரணத் தண்டனைக்கு பதிலாக சிறைத் தண்டனை விதித்தது.
இந்த நால்வரும் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி மாலை 4 மணியளவில் சிலாங்கூர் கோம்பாக், Sunway பத்து கேவ்ஸ் , ஜாலான்SM 2 என்ற இடத்தில் methamphetamine போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.