துன் மகாதீர் முகமது மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18-

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுரையீரல் மற்றும் காற்றுக்குழாய்களை உறுத்தும் தொடர்ச்சிான இருமளுக்கு ஆளானதைத் தொடர்ந்து 99 வயதுதான துன் மகாதீர் கடந்த திங்கட்கிழமை IJN- னில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக Bloomberg கூறுகிறது.

மாரடைப்பு உட்பட மேலும் பல்வேறு உடல் உபாதைகளால் அவதியுற்ற துன் மகாதீர், அண்மைய காலமாக தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஆகக்கடைசியாக கிருமித் தொற்றுக்கு ஆளான துன் மகாதீர் கடந்த ஜனவரி மாதம் IJN- னில் அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 மாத காலம் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

கடந்த மார்ச் 18 ஆம் தேதி துன் மகாதீர், IJN- லிருந்து வெளியேறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS