உலகளவில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு

கோலா லம்பூர்,ஜுலை19-

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளன.

பல விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த தகவல் தொழில்நுட்ப செயலிழப்புக்கு CrowdStrike மற்றும் Microsoft – ஆகியவற்றை நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஐரோப்பிய விமான நிலையங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த சேவை செயலிழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக Microsoft மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய தலைநகர் டில்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானியங்கி இயந்திரங்கள் செயல்படாத நிலையில், ஊழியர்களே பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

WATCH OUR LATEST NEWS