
கோலா லம்பூர்,ஜுலை19-
தொழில்நுட்பக் கோளாறினால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் KLIA Terminal 2 இல் AirAsia விமானச் சேவைகளில் இன்று பாதிப்பு ஏற்பட்டன.
குறிப்பாக, பயணிகள் தஙகளை பதிவு செய்து கொள்ளும் முகப்பிடங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பயணிகள் தங்களை பதிவு செய்து கொள்வதில் பல்வேறு அசெளகரியங்களை, சிரமங்களைஙுயம் எதிர்நோக்கியதுடன் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
எனினும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானச் சேவையில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.