பினாங்கு,ஜூலை 20-
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போன்று பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜலான் பினாங்கில் பினாங்கு போலீஸ் தலைமைகத்தின் முன்புறம் மாது ஒருவர் சாலையில் நின்று கொண்டு, வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு விளைவித்தாக கூறப்படுவது குறித்து போலீசார் எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்று வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ரஸ்லான் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.
சமூக வலைத்தளத்தில் Viralq என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்ட அந்த காணொளியை போலீசாரும் பார்த்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால், அந்த இடையூறு குறித்து போலீசார் எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்ற போதிலும் அது குறித்து புலன் விசாரணை செய்து வரவதாக ரஸ்லான் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட பெண் குறித்து தகவல் கொண்டிருப்பவர்கள் போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.