14 வயது மாணவனுக்கு தலை 14 தையல்கள் போடப்பட்டுள்ளது

ஜூலை 21-

தொலைபேசியினால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 14 வயது மாணவனுக்கு தலை 14 தையல்கள் போடப்பட்டுள்ளதாக Raub வட்டார போலீஸ் தலைவர் Superintendan Mohd Shahril Abdul Rahman தெரிவித்தார். தனது தொலைபேசியை பழுதாக்கி விட்டதால் புது தொலைபேசியை வாங்கி தருமாரு கேட்டு 16 முதல் 17 வயது கொண்ட மூவர் அந்த 14 வயது மாணவரைத் தாக்கியதில், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு 14 தையல்கள் போடப்பட்டுள்ளன.

கால்வாயில் வைத்து அடித்துடன் 14 வயது மாணவருக்குக் காயங்கள் விளைவித்த அந்த மூவரையும் போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளாதாகவும் இந்தச் சம்பவத்தின் போது அந்த மூவரும் எந்தவொரு ஆயுதங்களும் பயன்படுத்தவில்லை என போலீஸ் கூறியது.

WATCH OUR LATEST NEWS