கோலாலம்பூர்,ஜூலை 21-
சமூக வலைத்தளங்களில் நிலவி வரும் பகடிவதை சம்பவங்கள் குறித்தான நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட வலைத்தளத்திற்கு அனுப்பிய தகவல் குறித்து அந்த நிர்வாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில், மீண்டும் அந்த வலைத்தள நிர்வாகத்தினர்க்கு கடுமையான கடிதம் வழங்கப்படும் என தொடர்புதுறை அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
மலேசிய அரசாங்கம் வழங்கிய அந்த பகடிவதை தொடர்பான கடிதத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றே தோன்றுவதால், அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்த நிர்வாகத்தினருக்கு கடுமையான முறையில் கடிதம் ஒன்று மீண்டும் அனுப்பப்படும் என அவர் மேலும் கூறினார்.
மலேசிய சட்டத்துறை, பல்லூட அமைச்சு, உள்நாட்டு விவகார அமைச்சு மற்றும் தொடர்புதுறை அமைச்சு என நான்கு அமைச்சுகளும் அமர்ந்து கலந்தாலோசனை செய்த பிறகு குறிப்பிட்ட சமூக வலைத்தள நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்படும் என அமைச்சர் Fahmi Fadzil கூறினார்.