மகளிடம் பாலியல் வல்லுறவு, தந்தை கைது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22-

13 வயதுடைய உடல் ஊனமுற்ற தனது மகள் குழந்தையை பிரசவிப்பதற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர், பாலியல் வல்லுறவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த உடல் ஊனமுற்றப் பெண், வயிற்று வலியினால் அதியுற்றதைத் தொடர்ந்து அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்ட போது, அந்தப் பெண், கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

தனது தந்தையினால் பாலியல் வல்லுறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக அந்தப் பெண் தெரிவித்ததைத் தொடர்ந்து 45 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டதாக திரெங்கானு, Dungun மாவட்ட போலீஸ் தலைவர் மைசூரா அப்துல் காதிர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS