சந்தேகப்பேர்வழிக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிப்பு

கோல குபு பாரு , ஜூலை 22

தஞ்சோம் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான 25 வயது நூர் ஃபர்ஹானா கார்த்தினி அப்துல்லா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு போலீஸ்காரருக்கு எதிரான தடுப்புக் காவல் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த சந்தேகப் பேர்வழிக்கு எதிரான தடுப்புக்காவல் வரும் ஜுலை 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டு றிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வரும் சிலிம் ரீவர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 26 வயதுடைய அந்த போலீஸ்காரர், சம்பந்தப்பட்ட மாணவியின் காதலன் என்று நம்பப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS